கோவை: கொடிசியா மைதானத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பொதுமக்களுக்காக ஒரு அற்புதமான மற்றும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியை நாளை 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்க உள்ளார்.
எவர்கிரீன் எண்டர்டெயின்மண்ட் வழங்கும் இந்த நிகழ்வு, குடும்பத்தோடு கொண்டாடுவதற்கு ஏற்ற இடமாக அமைய உள்ளது. சுமார் 250 அடி நீளத்தில் தத்ரூபமான கடலோரக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கே சென்ற உணர்வை இது பார்வையாளர்களுக்கு வழங்கும்.
மேலும் 90 அடி உயர பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளித்து மகிழவும், அதன் அழகை ரசிக்கவும் வசதிகள் உள்ளன. நீர்வீழ்ச்சிக்கு மேலே பறப்பது போன்ற ஒரு திரில்லான அனுபவத்தைப் பெறவும் இங்கு வாய்ப்பு உள்ளது. இங்கு இசைக்கு ஏற்றவாறு ஆடலாம், பாடலாம் மற்றும் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடி மகிழலாம்.
அதுமட்டுமின்றி இங்கு உலகத்தரம் வாய்ந்த பர்னிச்சர்களின் மெகா பர்னிச்சர் மேளா நடைபெறுகிறது. வீட்டுக்கு தேவையான மெத்தைகள், பர்னிச்சர் பொருட்கள் அனைத்தும் மிகவும் குறைந்த விலையில் இங்கு கிடைக்கும்.
மக்கள் வசதிக்காக ஏராளமான கார்கள், இருசக்கர வாகனங்கள் இலவசமாக நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு குதூகலிக்கும் படியும் நடைபெற உள்ளது.
இதன் நுழைவு கட்டணம் 5 முதல் 10 வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.199, 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.299 என நிர்ணயிக்கபட்டுள்ளது. வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

