Header Top Ad
Header Top Ad

கோவையில் BIS சார்பில் தர விதிகள் குறித்தான கருத்தரங்கு

கோவை: கோவையில் BIS சார்பில் குடியிருப்புகளுக்கான மின்சார கட்டமைப்பில் கடைபிடிக்க வேண்டிய தர விதிகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் BIS இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் ‘குடியிருப்புகளுக்கான மின்சார கட்டமைப்பில் கடைபிடிக்க வேண்டிய தர விதிகள்’ குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார்.

BIS கோவை அலுவலகத்தின்
மூத்த விஞ்ஞானி பவானி, இயக்குநர் ரமேஷ், மாநில மின் விநியோக துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மின் கட்டமைப்பில் தர கட்டுப்பாடுகள் கடைபிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், நுகர்வோர் அமைப்புகள் பங்கேற்றனர்.

Recent News