Header Top Ad
Header Top Ad

மண்ட பத்தரம் பதாகைகளுடன் சென்ற பாஜகவினர் கைது

கோவை: கோவையில் மண்ட பத்தரம் என்ற பதாகையை வைக்கச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகரில் சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதாகவும் எனவே சாலையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பாஜக இளைஞரணி சார்பில் பதாகை வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள வணிக வளாகம் எதிரில் மண்ட பத்தரம் என்ற வாசகம், நடிகர் வடிவேலுவின் காமெடி புகைப்படத்துடன் பதாகையை வைக்கும் நிகழ்ச்சியை கோவை மாநகர பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணப்பிரசாத் தலைமையில் நடத்த இருந்தனர்.

இந்நிலையில் பதாகைகளுடன் பாஜகவினர் சென்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

Recent News