கோவையில் அனைத்து ரேஷன் கடைகளில் மோடி புகைப்படம் – 50 பாஜகவினர் கைது

கோவை:கோவையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக-வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வலியுறுத்தியும், அன்னயோஜனா திட்டம் பற்றிய தகவல் பலகை வைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கோவை சிவானாந்தா காலனி பகுதியில் இன்று பாஜக ஒன்றிய அரசு நலத்திட்ட பிரிவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.

அப்போது பாஜகவினர் அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். அங்கு போடப்பட்டிருந்த சாமியான பந்தல் மற்றும் பாஜக கொடி பேனர்களை போலீசார் அகற்றியதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

இதனைத்தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக-வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கியவர் கைது!

கோவை சரவணம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய அன்னூரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Video

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அட்டகாசம்: இன்ப்ளுயன்சர்களிடம் விசாரணை!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் நண்பர்கள் பொது இடத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை போலீசார் விசாரணை செய்தனர்.