அன்னபூர்ணா ஹோட்டலில் இன்று முதல் மெனு குறைப்பு…

கோவை: கேஸ் சிலிண்டர் தட்டுபாடு காரணமாக உணவு மெனு குறைக்கப்படுவதாக அன்னபூர்ணா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

தற்போது நிலவி வரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக கோவையில் அன்னபூர்ணா உணவகம் இன்று (10.03.2026) முதல் உணவு மெனு பட்டியலை குறைப்பதாக தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த பிரபல சைவ உணவகமாக திகழ்ந்து வரும் அன்னபூர்னா ஹோட்டல் நிர்வாகம், பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில் உணவு மெனு குறைக்கபடுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாக LPG ஏரிவாயு கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும் அதனால் LPF எரிபொருள் கிடைப்பதில் தினசரி குறைபாடுகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன் காரணமாக சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதாகவும், அதன்படி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டும் ஹோட்டலில் இருக்கும் என்றும் உணவு மெனு பட்டியல் குறைக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க அரசு மற்றும் விநியோகத்தர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றோம் என்றும்
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதகாவும் தெரிவித்துள்ளது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...