அதிமுகவை அழிக்கும் முடிவில் பாஜக வெற்றி பெற்றது- கோவையில் புகழேந்தி விமர்சனம்…

கோவை: அதிமுகவை அழிக்கும் முடிவில் பாஜக வெற்றி கண்டது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிட்டார். எங்களுடைய கொள்கை கோட்பாடு எல்லாம் மதவாத சக்திகளுக்கு எதிரானது என்றும் என்னுடைய அரசியல் பயணமும் பேச்சும் மதவாத சக்தி களுக்கு எதிரானதாக இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் மதவாத சக்திகள் பாஜகவினர் தான் என்று தெரிவித்த அவர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவரால் பாஜக வளர்ந்து வந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தற்குறி என்று கூட அண்ணாமலை விமர்சித்ததாகவும் குறிப்பிட்ட அவர் அது பாஜகவிற்கு கெட்ட நேரமாக மாறிவிட்டது அதனால் அவரை காலி செய்து விட்டார்கள் என தெரிவித்தார்.

பாஜகவின் கணக்கின்படி அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் என்றும் அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு அதனை செயல்படுத்தி விட்டார்கள் என தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா பெரியார் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரெல்லாம் வளர்த்த இயக்கத்தை காலி செய்ய வேண்டும் என்று பாஜகவினர் முடிவு செய்து எடப்பாடி பழனிச்சாமியை வைத்து அதில் வெற்றி பெற்று விட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் யாரும் இங்கு வந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார். திமுக எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேசுவதை காட்டிலும் உடன் இருந்த எனக்குத்தான் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அதிகமாக தெரியும் எனவே அவருக்கு ஆதரவான வாக்குகளையும் இல்லாமல் செய்ய முடியும் என தெரிவித்தார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சென்று ரோடுரோடாக அலைவதாகவும் ஜெயலலிதா இருந்த பொழுது பாஜகவினர் போயஸ் கார்டன் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அறிய யாராவது எடப்பாடி பழனிச்சாமி ஏ முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பிய அவர் முதலமைச்சர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்த பார்க்கும் என்றும் அதனால் தான் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் திமுகவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உடையது இல்லை என்றும் பழனிச்சாமி என்னை தேடி வந்து எவ்வளவு தான் அழைத்தாலும் நான் அங்கு செல்ல மாட்டேன் பழனிச்சாமி எங்களுடைய எதிரி என தெரிவித்தார். பழனிச்சாமி முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை என்றும் பழனிச்சாமியை போன்று ஒரு துரோகியை அரசியலில் யாரும் பார்க்க முடியாது என்றும் அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர் பழனிச்சாமி என தெரிவித்தார்.

சிவி சண்முகம் நயன்தாரா பற்றி பேசியது பற்றி குறிப்பிட்ட அவர் அது மிகவும் ஒரு கேவலமான அரசியல் அதற்கு கனவு காணுங்கள் என்று குறிப்பிட்ட அப்துல் கலாம் பெயரை உபயோகிப்பதா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும் இவர்களுக்கு நயன்தாரா கேவலமாக போய்விட்டார்களா என்றும் வினவினார். இது போன்ற ஆட்களை வைத்துக் கொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்வதாகவும் இனி அங்க இருப்பவர்களும் ஒவ்வொரு நடிகை ஆக கேட்பார்கள் போல என தெரிவித்தார்.

சசிகலா கட்சி ஆரம்பித்திருப்பது குறித்தான கேள்விக்கு அது அவருடைய சொந்த கட்சி அல்ல என்றும் அவர் யாரிடமோ இருந்து கட்சியை வாடகைக்கு வாங்கி இருக்கலாம் அல்லது சொந்தமாக செய்திருக்கலாம் அது எனக்கு தெரியாது ஆனால் அது அவருடைய சொந்த கட்சி அல்ல தினகரன் மீது உள்ள கோபத்தினால் அவர் அவ்வாறு செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது என தெரிவித்தார்.

என்னைப் பொறுத்தவரை தேர்தல் நிறைவடைந்து விட்டது என தெரிவித்த அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றே தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலினும் 10 வருடம் முதலமைச்சராக தொடர்வார் அதுதான் தீர்ப்பாகவும் எழுதப்பட்டுள்ளது நான் கூறுவது தான் நடக்கும் தேர்தல் முடிவாக வரும் என தெரிவித்தார்.

ரஜினிகாந்தை விமர்சித்து ஒரு அரசியல் கட்சி நிர்வாகி பேசுகிறார் என்று ஆதவ அர்ஜுனாவை குறிப்பிட்ட அவர் அவருக்கு அவ்வாறு பேசுவதற்கு என்ன தேவை வந்தது என கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்விக்கு, தமிழக வெற்றி கழகம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது ஆனால் கடந்த 10, 15 நாட்களாக கட்சியின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது என்றும் அந்தக் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களுடைய எண்ணமும் கொள்கையும் வேறு யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்று இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது அனைத்து கட்சி இனிவரும் சென்னையில் ஏன் முகாமிடுக்கிறார்கள் என்று தெரியவில்லை சென்னையில் அதிக வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் எண்ணினாலும் சென்னை திமுகவின் கோட்டை என தெரிவித்தார். விஜய் வாக்குகளை நன்கு பிரிப்பார் Ball யை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து விடுவார், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார்.

எஸ் பி வேலுமணி நல்ல ஒரு Field Worker தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது அனைத்தும் போய்விட்டது என தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பயணம் செய்வதால் எஸ்பி வேலுமணியும் காலி ஆகிவிடுவார் என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரன் அனைவரும் பிரிந்து இருந்தார்கள் தற்பொழுது டிடிவி தினகரன் அங்கு சென்று சேர்ந்தவுடன எடப்பாடி பழனிச்சாமிக்கு தினகரன் நல்லவர் ஆகிவிட்டாரா எனவும் கேள்வி எழுப்பினார். டிடிவி தினகரன் 300 வாக்குகள் கூட வராது எனவும் தென்தமிழகமாக இருந்தாலும் சரி முழு தமிழகம் ஆக இருந்தாலும் சரி எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ளாது மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை பொது எதிரியாக தான் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் உங்கள் கட்சி கொடியில் எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்று இருப்பது குறித்தான கேள்விக்கு, அதைப் பற்றி முதலமைச்சர் தவறாக எதையும் பேசவில்லை என்னுடன் அன்பாக தான் பேசினார் என்றும், முதலமைச்சர் அறைக்கு செல்லும் பொழுது செருப்பை வெளியில் விட்டு விட்டு சென்றேன் அப்பொழுது கூட அவர் செருப்பை அணிந்து கொண்டு உள்ளே வாருங்கள் என்று தான் கூறினார் என்று கூறினார்.

முதல்வர் மிகவும் தெளிவாக இருப்பதாக கூறினார். நான் கலைஞரை கூட தவறாக பேசியது இல்லை என்னுடைய வீடு சூறையாடப்படும் பொழுது கூட கலைஞர் முரசொலியில் தமிழர் என்பதால் வீடு தாக்கப்படுகிறதா என்று தனக்கு ஆதரவாக தான் எழுதியிருந்தார் என தெரிவித்தார்.

தற்போதைய மதசார்பு அணிகள் உள்ளே வரக்கூடாது அது எங்களுடைய கடமை அந்த கடமையை செய்து முடிப்போம் 100% வெற்றி பெறுவோம் அதிமுக ஒரு சீட்டு கூட வராது அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும் தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டமன்ற...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...