கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்- உருவ பொம்மை எரிப்பு…

கோவை: Go Back MODI என்ற முழக்கத்துடன் கருப்புக்கொடி காண்பித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைப்பதற்காக விமான மூலம் கோவைக்கு வருகை தருகிறார். விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வரை அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் பிரதமருக்கு எதிராகவும் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்து மறுமலர்ச்சி மக்களை இயக்கம் சார்பில் பிரதமருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மசக்காளிப்பாளையம் சந்திப்பில் பிரதமர் மோடியை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. பீகார் தேர்தலின் பொழுது தமிழகத்தில் பீகார் மக்களை தமிழக அரசு வஞ்சிப்பதாக பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டதாகவும் அதனை கண்டிக்கும் வகையிலும் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் பிரதமருக்கு கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கட்சி உட்பட பல்வேறு இயக்கங்கள் அடங்கிய முற்போக்கு இயக்கங்கள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் GO BACK MODI என்ற பேனருடன் கருப்பு கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழகத்தில் பீகார் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பொய்யான பிரச்சாரத்தை பிரதமர் முன்னெடுத்ததாகவும் இதனை கண்டிக்கும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் வருகையின் பொழுது Go Back MODI என்று கருப்பு கொடி போராட்டம் நடத்தியதால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.