தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தான முகாம்…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

Advertisement

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் தமிழ்வேந்தன், இந்த முகாமை துவக்கி வைத்தார். சிங்காநல்லூர், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையின் இஎஸ்ஐ ரத்த வங்கி தலைமை மருத்துவர் டாக்டர் உமாசரோஜினி தனது குழுவினருடன் முகாமை நடத்தினார்.

Advertisement

இந்நிகழ்வில், பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) முனைவர் வெங்கடேச பழனிச்சாமி, மாணவர் நலத்துறை முதன்மையர் முனைவர் மரகதம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பாலசுப்ரமணியம். ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கொடையாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள்ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 155 பேர் இரத்த தானம் செய்தனர்

Recent News

விதிகளை மீறினால் அபராதம்: 8 இடங்களில் ஏஐ கேமிரா; கோவை கமிஷனர் தகவல்!

To control speeding and ensure traffic discipline, Coimbatore Police are installing AI-powered cameras at eight points along the newly inaugurated GD Flyover. These cameras will automatically detect violations such as overspeeding, helmet-less driving, and seat belt non-compliance, with violators facing instant fines.

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp