கோவை: கோவையில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மகேஷ் மற்றும் ஜெயராஜ். இவர்கள் கோவை துடியலூரை அடுத்த விஸ்வாசபுரத்தில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
துடியலூரில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வந்தனர். இதனிடையே வழக்கம் போல் இன்று இருவரும் கடைக்குச் செல்லவில்லை. கடை பூட்டியே இருந்ததால், கடை ஊழியர்கள் அவர்கள் இருவரும் தங்கியிருந்த அறைக்குச் சென்ற, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு, இருவரும் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துடியலூர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மகேஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாகக் கிடந்தனர்.
இருவரது உடலையும் மீட்ட போலீசார் இவர்கள் எதனால் உயிரிழந்தனர். இருவருக்கும் ஏதேனும் முன் பகை உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டிலிருந்து இருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரில் பேக்கரி நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் என்பவர் தூக்கிடப்பட நிலையிலும் சடலமாக மீட்பு.