கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், முக்கிய இடங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.
மர்ம ஆசாமி ஒருவர் இமெயில் மூலம் இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து விடுத்து வரும் நிலையில், தமிழக சைபர் கிரைம் போலீசார் அந்த ஆசாமியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதனிடையே, கோவை விமான நிலையத்திற்கு இன்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அது புரளி என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.