கோவை: ரத்தினபுரியில் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரத்தினபுரி பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தமிழ் செல்வி (48). இவர் நேற்று காலை வீட்டின் முன்பக்க கதவை பூட்டாமல் குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார். வீட்டிற்குள் ஏதோ சத்தம் வருவதை கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் இருந்து ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறையில் சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழ் செல்வி ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டபகலில் வீடு புகுந்து பணம், செல்போன் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.