சேற்றில் சிக்கிய பஸ்; கோவையில் ஸ்தம்பித்த போக்குவரத்து! சொன்னா கேக்குறாய்ங்களா?

கோவை: பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட கோவை-திருச்சி சாலையில் பேருந்து ஒன்று சேற்றில் சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.

கோவை மாநகரில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டன. பல இடங்களில் சாலை புனரமைக்கப்பட்ட நிலையில், இன்றும் சில முக்கிய இடங்களில் தோண்டி, மண் கொண்டு மூடப்பட்ட சாலை சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது.

குறிப்பாக கோவை-திருச்சி சாலையை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்று கூறும் அளவிற்கு அந்த சாலை தற்போது படு மோசமாக உள்ளது.

சிங்காநல்லூர் உழவர் சந்தையில் இருந்து ஒண்டிப்புதூர் வரை தோண்டப்பட்ட சாலையில், மீண்டும் அமைக்கப்படவில்லை. தற்போது மழையும் பெய்துள்ளதால் சேறும் சகதியுமான சாலையில் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

சிலர் குடும்பத்துடன் பைக்கில் சென்று சேற்றில் வழுக்கி விழும் நிலையும் உள்ளது. இதனிடையே சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனை அருகே திருச்சி சாலை தோண்டி மூட்டப்பட்டது. ஆனால், முறையாக தார் சாலை அமைக்கப்படவில்லை.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில், சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் இங்கு தினமும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சேற்றில் சிக்கிய பேருந்து

இந்த நிலையில், அவ்வழியாக சவுரிபாளையம் நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து மீட்பு வாகனம் மூலம் அந்த பேருந்து மீட்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சீர்படுத்தாவிட்டால், ஏற்படும் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பது மிகவும் கடினம் என்று பொதுமக்கள் விரக்தி தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை தருவது நிறுத்தி வைக்கப்பட்டது…

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.