கோவையில் மிட்டாய் தயாரிப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி வருகிற 24.03.2026 தேதியில் நடைபெறுகிறது.

சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகளுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்கவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும். இந்தப்பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆகவே, பயிற்சியின் போது சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 + GST 18% செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பயிற்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வுக்கூட்டம்…

கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை...

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.