கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வுக்கூட்டம்…

கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisement

தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

click here to read news சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!

Advertisement

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் சுனில் குமார் யாதவ், சஞ்சய் குமார், பிரஞ்சல் யாதவ், யசேந்திர சிங், காவல் கண்காணிப்பு பார்வையாளர் சுதீர்குமார், செலவின கண்காணிப்பு பார்வையாளர் ரோகிணி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் முன்னிலையில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தற்போது வரை கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ள தேர்தல் பணிகள் திட்டமிடல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

மேலும் இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அலுவலர்களும் பங்கேற்று தற்போது வரை அந்தந்த சட்டமன்ற தொகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விவரித்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.