கோவை: கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க மற்றும் வான் புலனாய்வுப் பிரிவு, சுங்கத் துணை ஆணையர் தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது சிங்கப்பூரில் இருந்து SCOOT விமானம் மூலம் 2 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவை (6.713 கிலோ) பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஃபஹத் மோன் முஜீப் மற்றும் சுஹைல் உபைதுல்லா என்பதும் தெரியவந்தது.
அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.