கோவையில் பெட்ரோல் பங்கில் தீப்பிடித்த கார்… பரபரப்பு!- Video

கோவை: கோவையில் பெட்ரோல் பங்கிற்கு வந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை-பொள்ளாச்சி சாலை குறிச்சி குளம் எதிரே பாரத் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிரப்ப ஆம்னி கார் ஒன்று வந்துள்ளது.

Advertisement

இதனிடையே காரில் திடீரென தீப்பிடித்தது. நொடிப்பொழுதில் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது.

இதுகுறித்து பங்க் ஊழியர்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்தது.

பெட்ரோல் பங்கில் கார் கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் நடந்த கொள்ளை- ஆட்டோ ஓட்டுநர் கைது…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிறுப்பு வளாகத்தில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு உதவிய குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம்...

Video

Join WhatsApp