முதலீடு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.1.01 கோடி மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு…

கோவை: அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.1.01 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டையை சேர்ந்தவர் அருணாகிரி (33). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவை பாலசுந்தரம் ரோடு பாப்பநாயக்கன் பாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அசோக்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

Advertisement

அவர் அருணாகிரியிடம் தான் கடந்த 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தான் நடத்தி வரும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி அருணாகிரி அந்த நிறுவனத்தில் ரூ.1 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார்.

அதன் பின்னர் அவர், அருணாகிரி முதலீடு செய்த பணத்தையும், அசோக்குமார் தருவதாக கூறிய கூடுதல் வட்டியையும் தரவில்லை. அசோக்குமாரை சந்தித்தும், போன் மூலம் தொடர்பு கொண்டும், அருணாகிரி தான் கட்டிய பணத்தை பல முறை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்தவி த பதிலும் சொல்லாமல் அருணாகிரியை ஏமாற்றி வந்துள்ளார். மேலும், அவருடன் சேர்த்து 51 முதலீட்டாளர்கள் ரூ.3 கோடியே 18 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருணாகிரி கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். மேலும், அசோக்குமார் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Recent News