கோவை: நாய்க்குட்டியை புதரில் வீசி துன்புறுத்தியதாக கோவையைச் சேர்ந்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கவுண்டம்பாளையம் அருகே உள்ள சிவாஜி காலனியில் முட்புதருக்குள் நாய்க்குட்டி வீசப்பட்டிருப்பதாக, விலங்குகள் நல தன்னார்வலர் பிரியா(52) என்பவருக்கு தகவல் கிடைத்தது.
அவர் அங்கு சென்று பார்த்தபோது, நாய்க்குட்டியை யாரும் மீட்க விடாமலும், உணவு அளிக்கவும் 2 பெண்கள் தடுத்தனர்.
இது குறித்து பிரியா கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண் நாய்க்குட்டியை முட்புதரில் வீசி துன்புறுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த பெண் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈