கோவை: கோவையில் இன்று காலை நடத்தப்பட்ட கோயம்புத்தூர் மாரத்தான் 2025 போட்டிக்காக பல்வேறு பகுதிகளிலும் திடீரென ரோடு ப்ளாக் செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக கோயம்புத்தூர் மாரத்தான்-2025 இன்று நடைபெற்றது. இதில் 25,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் போட்டியை, வ.உ.சி மைதானம் அருகே மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ் எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து மாரத்தானில் அவரும் பங்கேற்றார்.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உட்பட வெவ்வேறு வழித்தடங்களை உள்ளடக்கி, 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இது தவிர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டமும் நடத்தப்பட்டது.
மாரத்தானில் பங்கேற்றவர்கள், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், அவிநாசி சாலை வழியாக ஓடினர். இதற்காக ஆங்காங்கே போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர். மேலும், சில இடங்களில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
போலீசாரின் இந்த திடீர் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். புளியகுளம்- ரெட்பீல்டு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
ஒவ்வொரு முறையும் திட்டமிடமால் திடீரென சாலையை அடைத்து பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டிய வாகன ஓட்டிகள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோ காட்சிகள்:-
A brick-laden lorry got stuck in a sudden road cave-in on Nallampalayam Road in Coimbatore, raising safety concerns over poorly restored underground drainage works.