Header Top Ad
Header Top Ad

கோவையில் வாகனங்களில் உள்ள பேட்டரிகளை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவை: கோவையில் வாகனங்களில் உள்ள பேட்டரிகளை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது!!!

கோவை, கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், சௌக்கார் நகர் பகுதிகளிலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரிகளை, திருடி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் 11-07-25 அன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சௌக்கார் நகர் பகுதியில் வாகனத்தின் பேட்டரியை திருடி செல்லும் காட்சிகள் அந்த பகுதிகளில் பொருத்தி இருக்கும் கண்காப்பு காமிராக்களில் பதிவாகி உள்ள நிலையில், தற்போது அந்த காட்சிகளை அப்பகுதி மக்கள் சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

சௌக்கார் நகர் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Recent News