கோவை: கோவையில் இந்த வாரம் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (ஜூலை 21ம் தேதி) முதல் ஜூலை 26ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவையில் ஜூலை 21,22,23 ஆகிய நாட்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜூலை 24 மற்றும் 25ம் தேதிகளிலும் மிதமான மழை பதிவாகலாம். ஜூலை 26 ஆம் தேதி மழை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த வாரம் கோவையில் குறைந்தது 22°C முதல் அதிகபட்சம் 32°C வரை வெப்பம் பதிவாகும். ஜூலை 24 அன்று மட்டும் வெப்பநிலை 21°C வரை குறையக்கூடும்.
பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.
