கோவை: கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவையில் கோடை வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. தினமும் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் இந்த வாரம் இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களும் குறைந்தது, 24 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
வெப்பம் வாட்டி வரும் நிலையில், கோடை மழை அறிவிப்பி வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.