நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்- கோவையில் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்வி…

கோவை: நிதி ஆயோக் கூட்டத்தில் இத்தனை ஆண்டுகள் பங்கேற்காமல் தற்போது பங்கேற்பது ஏன் என முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்…

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டு காலமாக பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார் என்றார். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி கடந்த மூன்று ஆண்டு காலமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் முதலமைச்சர் ஸ்டாலின் என கூறினார்.

மூன்று ஆண்டு காலம் புறக்கணித்த பிறகு, நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கருத்தை பதிவு செய்து இருக்கிறார் என கூறிய அவர் நாங்கள் கேட்பது எல்லாம் ஏன் ? மூன்றாண்டு காலமாக பாரத பிரதமர் மோடி தலைமைகள் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பினார்

அந்த மூன்று ஆண்டுகாலம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தால் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்று இருக்கலாம். புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்து இருக்கலாம். மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை இந்த கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம். ஆனால் மக்கள் மீது அக்கறையில்லாத முதலமைச்சர் ஸ்டாலின் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது என்றார்.

இப்பொழுது தமிழகத்திலே ஸ்டாலின் மாடல் ஆட்சியில், பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று இருக்கிறது. இன்று அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு மட்டத்தில் ஊழல் நடைபெற்று, அதற்கான ரைடுகள் நடைபெற்ற விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆகையால் பயந்து டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது, கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பை தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக வந்த பிறகு, ஸ்டாலின் அதே பிரதமருக்கு வெள்ளைக் கொடி பிடித்தார் என்றார்.

ஒரு முதலமைச்சர் தன்னுடைய கடமையை செய்ய தவறி விட்டார்.. கடந்த மூன்று ஆண்டு காலமாக நடைபெற்ற நிதி ஆயோ கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழகத்தின் பிரச்சனையை அதில் தெரிவித்து இருந்தால் மக்களுக்கு நன்மை கிடைத்து இருக்கும். பல்வேறு திட்டங்களுக்கு நன்மை கிடைத்து இருக்கும், நிலுவைத் தொகையும் கிடைத்து இருக்கும். அதோடு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது. நான் ஒவ்வொருமுறை செய்தியாளர்களை சந்திக்கும் போதும் தமிழகத்தில் நடைபெறுகிற சம்பவங்களை கோடிட்டு காட்டுவேன்.

இந்த அரசு வந்ததுக்கு பிறகு நாட்டு மக்கள், பெண்கள், சிறுமிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. இந்த அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன் என்றார். சட்டம் – ஒழுங்கு மிக, மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. இது தான் நாடறிந்த உண்மை என்றார்

அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கூறுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்தப் பெண் கொடுத்த புகாரை அப்பொழுதே எஃப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்து இருக்க வேண்டும். அந்த பெண் ஏழாம் தேதி புகார் கொடுத்து இருக்கிறார். அதை பத்தாம் தேதி தான் புகாராக பதிவு செய்கிறார்கள். அந்த புகார் தெய்வச் செயல் என்பவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார், அவருக்கு உடனே ஜாமீன் கிடைத்து விட்டது. அந்தப் பெண் கொடுத்த புகாரை ஊடகம் பத்திரிகை என அனைத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள். காவலர்கள் இந்த புகாரை ஒரு போதும் வெளியிட்ட கூடாது. ஆனால் அந்தப் பெண்மணி கொடுத்த புகாரை அப்படியே ஊடகத்திலும் பத்திரிகைகளையும் வெளியிட்டு இருப்பதாக பேட்டியை கொடுத்து இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிப்பதற்காக சென்னை சென்று உள்ளார். அங்கு இருக்கும் காவலருக்கு இது தெரிய வர ஆளுநரை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த பெண்மணியின் அவரின் தாயாரையும் ஆட்டோவில் ஏற்றி வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

அந்த பாதிக்கப்பட்ட பின் எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என கூறி இருக்கிறார். அந்தப் பெண்மணி மிகுந்த அச்சத்தோடு தன்னுடைய கொடுமையை ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் என்றார்.

எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டு இருப்பதற்கு அரக்கோணமே சாட்சி என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன், அதேபோல கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில், ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து உள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை, காவல் துறையே வெளியிடுகிறது. குற்றவாளிகள் இதில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல் துறையே உதவி செய்கிறது என்றார்.

அதே போல இது சாதாரண குற்ற பிரிவிலே வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இதை கண்டித்து அ.தி.மு.க சார்பிலே அரக்கோணம் பெண்மணிக்கும் கும்பகோணம் பெண்மணிக்கும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரக்கோணத்திலும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதேபோல இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஒரு காப்பகத்தில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடித்து துன்புறுத்தி கொலை செய்து இருக்கிறார்கள். இந்த செய்தியாக வெளிவந்து இருக்கிறது. இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது.

இனியாவது இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

நீலகிரி மாவட்டத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறார்கள், கனமழை பெய்யும் என தெரிவித்து இருக்கிறார்கள் மக்கள் மிகுந்த ஜாக்கிரதியோடு இருக்க வேண்டும் என்று கூறினார்.

உதயநிதி E.D -க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என கூறுகிறார் என்ற கேள்விக்கு,

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது, மோடி வந்த பொழுது கருப்பு பலூன் விட்டீர்கள்.. ஸ்டாலின் முதல்வராக இருக்கும் பொழுது மோடி தமிழகத்திற்கு வரும் போது வெள்ளை கொடி பிடித்தீர்கள். ஏன் ? கடந்த மூன்று ஆண்டு காலமாக பிரதமரை சந்தித்து எந்த கோரிக்கையும் வைக்கவில்லை ? இப்ப இவர்கள் பிரதமரை சந்திக்க அவசியம் என்ன வந்தது ? பிரச்சனை வந்து விட்டது அதனால் சந்திக்கிறார்கள்.. உதயநிதி கூறியது போல் பயம் இல்லை, என்றாnல் ஏன் ? வெளிநாட்டிற்கு ஓடி விட்டார்கள். இதுதான் ஆரம்ப கட்டம், இனிமேல் தான் தெரியும் எனப் கூறினார்..

அதேபோல பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விபத்துகளை தடுத்து நிறுத்த முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசி இருந்தோம், ஆனால் இந்த அரசு என்ன செய்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. பட்டாசு தொழில் என்பது ஒரு அபாயகரமான தொழில். அதற்கு முன்னெச்சரிக்கைகள் தேவை, என்ன பாதுகாப்பு தேவை என்பதை இந்த அரசாங்கம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி செய்தால் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம். அரசு இதை செய்யும் என நம்புவதாக கூறினார்.

எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது என்ற கேள்விக்கு,

தற்போது அவருக்கு வந்து இருக்கிறது உங்களுக்கும் கூட வரலாம் என கூறினார். இந்த ஆட்சியில் தான் பாதுகாப்பில் இல்லையே அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் என கூறினார். இந்த ஆட்சியில் அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒட்டு மொத்தமா நாட்டுக்கே பாதுகாப்பு இல்லை, இந்த ஆட்சி இருக்கும் வரை சட்டம் – ஒழுங்கு மிக . மிக மோசமான நிலையில் இருக்கும். எங்க பார்த்தாலும் போதை கஞ்சா அடித்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் செய்கிறார்கள்.

முதலில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். போதை பொருளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். நான் சொல்வதை அரசு செவி கொடுத்து கேட்டு இருந்தால், அப்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்து இருக்காது. போதைக்கு அடிமையானவர்கள் இது போன்ற தவறான வழிகளில் சென்று கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை போன்றவைகளை செய்கிறார்கள்.

அமலாக்கத் துறை சம்பந்தமான கேள்விக்கு,

உயர்நீதிமன்றம் விசாரணை தொடரலாம் என்கிறார்கள், உச்ச நீதிமன்றம் அதற்கு தடையானை திறப்பு கிடைக்கிறது, அமலாக்கத் துறைக்கு முழு தகவலையும் அபிடவிட் ஆக தாக்கல் செய்யுங்கள் என கூறி இருக்கிறார்கள். பாடலைக்கு பின்னரே முழுமையான தகவல்கள் தெரியும். எப்பொழுதுமே புகை இல்லாமல் ஒரு விஷயம் எரியாது. அமலாக்கத் துறை பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதிகமாக பேச முடியாது என்று கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.