Header Top Ad
Header Top Ad

கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ காலமானார்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு 49.34% வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் அமுல் கந்தசாமி (வயது 60).

கடந்த சில நாட்களுக்கு முன்பு நோய்த்தொற்று காரணமாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடல் நிலை மோசமடையவே வென்டிலேட்ட உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க.,வினர் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அமுல் கந்தசாமியின் உடல் மருத்துவமனையில் இருந்து அன்னூரில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

Recent News