கோவை: சாணி பவுடர் பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரிகள் 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 250 கிலோ பறிமுதல் செய்தனர். சப்ளை செய்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட சாணி பவுடர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Click here to read news சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!
இதையடுத்து போலீசார் ரோந்து சென்று பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இடையர் வீதியில் உள்ள ஒரு கடையில் சாணி பவுடர் பதுக்கி வைத்து விற்பனை செய்த கணபதியை சேர்ந்த திருநீலகண்டன் (59) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல ஆர்ஜி வீதியில் அடுத்தடுத்து கடைகளில் சோதனை மேற்கொண்டு சாணி பவுடர் விற்ற வியாபாரி ராம் நகரை சேர்ந்த வசந்தி (60), ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வம் (69), வீரகேரளம் பகுதியை சேர்ந்த குனநாதன் (52), லிங்கப்பா செட்டி வீதியை சேர்ந்த சிவக்குமார் (50), வேலாண்டிப்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (63) ஆகியோரை கைது செய்தனர்.
Click here to read news கோவையில் மிட்டாய் தயாரிப்பு பயிற்சி…
அவர்களிடம் இருந்து 250 கிலோ சாணி பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல வியாபாரிகளுக்கு சாணி பவுடர் சப்ளை செய்த சுக்ரவார்பேட்டையை சேர்ந்த சாந்தி டைஸ் நிறுவனம், சேலத்தை சேர்ந்த பேக்முன் அண்டு கோ நிறுவனம்,
சென்னையைச் சேர்ந்த துளசி கலர் டிரேடர்ஸ், ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ மங்கலேஸ்வரி ஏஜென்சி, அகமதாபாத்தை சேர்ந்த கோத்தாரி கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர்.
Who gets heat stroke? வெப்ப பக்கவாதம் தெரிந்து கொள்ள வேண்டியவை…!

