கோவையில் அழகிப்போட்டி… மாடல்களுடன் குழந்தைகளும் பங்கேற்பு! – வீடியோ

கோவை: கோவையில் நடைபெற்ற மிஸ்டர், அன்ட் மிஸ் அழகிப்போட்டியில், குழந்தைகளுக்கான சிறப்பு கேட்வாக் நிகழ்ச்சியும் இடம்பெற்றதை பொதுமக்கள் மெய்மறந்து ரசித்தனர்.

ஆடை வடிவமைப்பு மற்றும் அழகுத்துறைக்கு இளைஞர்கள், இளம் பெண்கள், மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில், ஆண்டுதோறும் சிறப்பு கேட்-வாக் நிகழ்ச்சியை கோவையை சேர்ந்த சில்பா சீதாராமன் நடத்தி வருகிறார்.

இதன் மூன்றாவது பதிப்பாக இந்த ஆண்டுக்கான கேட்-வாக் நிகழ்ச்சி கோவை விமான நிலையம் அருகே உள்ள ஜோன் உணவகத்தில் நடைபெற்றது.

‘இந்தியா ப்ரைட் ஐ-கான்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் அழகிய ஆண்களும், பெண்களும் பூனை நடைபோட்டனர். தொடர்ந்து, குழந்தைகளின் ஒய்யார அணிவகுப்பும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மூலம் 2025ம் ஆண்டை சிறப்பாக வழியனுப்பியுள்ளோம். இதனை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல பாதை உருவாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து அழகிகள், ஆண்கள் வந்துள்ளர். கோவையில் இருந்து அதிகமாக யாரும் வெளி வரவில்லை. இதனை முறியடிக்க வேண்டும். இதுபோன்ற போட்டிகளை நடத்தி, இத்துறைக்கு வரும் அனைவருக்கும் ஒரு மேடையை உருவாக்கித் தருகிறோம்.

இங்கு அழகிகள், மற்றும் ஆணழகனை தேர்வு செய்ய, 5 வகை போட்டிகளை நடத்தினோம். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள், மெடல்கள் வழங்கினோம். இது அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு முக்கிய மைல்கல்லாக அமையும்.

விரைவில் மிஸ்டர் கோயம்புத்தூர், மிஸஸ் கோயம்புத்தூர் என்று பலரும் வரவேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மார்ட்டின், மற்றும் விளையாட்டு வடிவமைப்பாளர் லிண்டோ ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். போட்டியின் நடுவர்களாக, யுவராஜ், நஜீருதின், தீபக் ஆகியோர் பங்கேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

Recent News

Video

Join WhatsApp