Header Top Ad
Header Top Ad

வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளை மூட கோவை கலெக்டர் உத்தரவு!

கோவை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் இயங்கி வரும் அனைத்து வகையான மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் / பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் (FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள் தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் கடைகள் (FL1) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் 15.08.2025 (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினத்தன்று மூட (Dry day) உத்திரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Recent News