இடைநிற்றலைத் தடுக்க பள்ளி மாணவிகளுடன் செல்போனில் பேசிய கோவை கலெக்டர்

கோவை: பள்ளி மாணவர்களை செல்போனில் அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர்…

Advertisement

கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது வரை கல்லூரியில் சேராத மாணவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்களை கண்டறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அலைபேசியில் அழைத்து அவர்களை பள்ளிக்கு வருமாறும் அவர்களின் உயர் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும் , கல்லூரி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் எடுத்துரைத்தார்.

மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்வர்களை 12ஆம் வகுப்பு துணை தேர்வில் பங்கேற்க தேவையான உதவிகளை பள்ளிகளின் மூலம் செய்திட உத்தரவிட்டார். மாணவர்கள் அவர்களின் விருப்பமான கல்லூரி படிப்பினை தொடர்வதற்கு எதுவாக கல்லூரியில் சேரவும், அவ்வாறு சேருவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ மாணவியர்கள் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Advertisement

இன்று துணி வணிகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு கல்வி தொடர கல்வி உதவித்தொகை வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பங்களை அளித்தனர்.

வீடியோ காட்சிகள்...

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group