கோவை குற்றாலம் மூடப்பட்டது- வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை: கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அடிவாரங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உள்பட்ட கோவை குற்றாலம் பகுதியில் பெய்த மழை காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இது குறித்து வனத் துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையாலும், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp