கோவை: இன்று ஒரு நாள் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சாடிவயல் கோவை குற்றாலம் பகுதிகளில் அதிகமான மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தளம் இன்று(17.08.2025) ஒரு நாள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு குறைந்து இயல்பான நிலைக்கு வந்தவுடன் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தளம் மீண்டும் திறக்கப்படும்.