கோவை: AI தொழில்நுட்பம் கொண்டு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணின் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்த இளைஞரை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் Gemini AI என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றியுள்ளார்.
இவர் அவருக்கு தெரிந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை AI கொண்டு ஆபாசமாக சித்தரித்து அந்தப் புகைப்படத்தை அந்த பெண்ணிற்கும் அனுப்பியுள்ளார்.
ஆபாச புகைபடத்தை பார்த்த அந்த பெண் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து மணிகண்டன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மணி கண்டணை கைது செய்தனர்.


