மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தும் பலனில்லை- கோவையில் விபரீத முடிவு எடுத்த குடும்பம்

கோவை: கோவையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கமலேஷ் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisement

இந்த நிலையில் கமலேஷ், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அருகில் இருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், மார்பக புற்று நோய் காரணமாக கமலேஷ், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அருகில் இருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கமலேஷின் மனைவி இலக்கியாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோய் இருந்ததும் அதற்கு சிகிச்சை எடுத்தும் சரியாகததால் மன வருத்தத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தற்கொலைக்கு முன்னர் கமலேஷ் வீடியோ பதிவை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள மார்பக புற்றுநோயை சரி செய்ய முடியாததால் நோயினால் அவர் அவதிப்பட்டு வருவதாகவும், எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும்,

உடல்களை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் அடக்கம் செய்யுமாறு கூறி சேமிப்பு பணத்தை சிஎஸ்ஐ தேவாலயத்திற்கு கொடுத்து விடுங்கள் தங்களது உடல்களை அரசும் அவருடன் பணியாற்றும் ஊழியர்களும் தேவாலயத்தினரும் இணைந்து அடக்கம் செய்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/DUQQiIGjwSY/?igsh=MXVjbWFtOGd5N2Qycg==

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வெள்ளியங்கிரி மலை சென்ற பக்தர் பரிதாப பலி!

வெள்ளியங்கிரி மலை ஏறிய திருப்பூர் பக்தர் ஒருவருக்கு முதல் மலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Video

கோவையில் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போதை இளைஞர்…

கோவை டவுன் ஹால் பகுதியில் மதுபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டிய நபரை உக்கடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.