BLO பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்- கோவையில் ஆசிரியர்கள் கோரிக்கை…

கோவை: BLO பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

அரசு பள்ளி ஆசிரியர்களை BLO பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) பணியாற்றிட அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாத காலங்களாக SIR பணியின் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பதாகவும் மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் பல்வேறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

எனவே ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களை BLO பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.