கோவை: கோவையில் மாநகராட்சி பணிக்கு வேகமாக சென்ற ஜே.சி.பி வாகனம் முதியோர் மீது மோதியது.
கோவையில் மாநகராட்சி பணிகளுக்காக வேகமாகச் சென்ற ஜேசிபி வாகனம் முதியோர் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கோவை மாவட்டம் உக்கடம், 86 வது வார்டு, புல்லுக்காடு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்து உள்ளார்.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், இன்று காலை புல்லுக்காடு பகுதியில் ஜே.சி.பி வாகனத்தின் மூலம் காலையில் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது சாலையில் நடந்து சென்ற முதியவரை ஜே.சி.பி மோதியதில் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினார். உடல் நசுங்கிய நிலையில் காயம் அடைந்த அந்த முதியவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காலை வேளையில் மக்கள் அதிகம் நடமாடும் நேரங்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது எனவும், இத்தகைய பணிகளை இரவு நேரங்களில் மட்டும் மேற்கொண்டு விரைவில் முடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.