கோவை: கோவையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் வைத்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மோட்டார் வாகன சட்டத்தின் படி அதிக ஒலி எழுப்ப கூடிய ஹாரன், சைலன்சர் ஆகியவற்றை பயன்படித்த கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது சக வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் என்பதால் அரசால் அவை தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சிலர் அதிக ஒலி எழுப்ப கூடிய ஹாரன், சைலன்சர்களை வாகனங்களில் பொருத்தி கொள்கின்றனர். காவல்துறையினரும் தணிக்கையின் போது அதிக ஒலி எழுப்பில் ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர்.
அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் உள்ள வாகனங்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் அதனை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது அதிக ஒலி எழுப்ப கூடிய ஹாரன் மற்றும் சைலன்சர்களுடன் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து மீண்டும் அதனை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினர்.

