தடாகம் அருகே விபத்து- பறிப்போன நண்பன் உயிர்…

கோவை: தடாகம் அருகே நடந்த விபத்தில் நண்பர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை அருகே நடந்த கார் விபத்தில் மூன்று நண்பர்களில் ஒருவர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியை சேர்ந்தவர் பரத்ராஜ்(29). இவர் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஆதித்யா சிங்காநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். மற்றொரு தோழி சங்கீதா பன்னிமடை பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பரத்ராஜ் மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் சங்கீதாவின் இல்லத்திற்கு சென்று விட்டு பின்னர் மூன்று பேரும் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆதித்யாவின் இல்லத்திற்கு காரில் புறப்பட்டுள்ளனர். பரத்ராஜ் காரை ஓட்டி சென்றுள்ளார்.

Advertisement

அப்பொழுது தடாகம் -கணுவாய் சாலையில் அதிவேகமாக காரை இயக்கியதாக தெரிகிறது. அந்நிலையில் காளையனூர் அருகே பரத்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பனை மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த பரத்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கீதா மற்றும் ஆதித்யாவிற்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சங்கீதா முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆதித்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

பரத்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள தடாகம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...