என்னுடன் பழகிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணமா? ஆள் வைத்து அடித்த காதலி மீது வழக்கு!

கோவை: பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, திருமண ஏற்பாடு செய்த வாலிபரை தாக்கிய காதலி உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர் குமார்(29). (பெயர் மாற்றம்). இவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த திருமணமான 36 வயது பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், குமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க வரன் தேடினர். இந்த தகவல் அவரது கள்ளக்காதலிக்கு தெரியவந்தது. அவர் தன்னுடன் பழக்கம் வைத்து கொண்டு நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என குமாரை கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் குமார் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அவரது கள்ளக்காதலி மற்றும் மேலும் ஒரு வாலிபர் வந்தனர். இருவரும் குமாரை தகாத வார்த்தையால் திட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து குமார் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை தாக்கிய அவரது காதலி லட்சுமி(36), வேடப்பட்டியை சேர்ந்த விஜய்பாபு(40) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp