அடுத்த வாரம் திறக்கப்பட உள்ள கோவை செம்மொழி பூங்கா- இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்…

கோவை: அடுத்த வாரம் திறக்கப்பட உள்ள செம்மொழி பூங்காவை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த செம்மொழி பூங்கா அடுத்த வாரம் 25ஆம் தேதி முதல்வரால் திறக்கப்பட உள்ளது. இந்நிலையை திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் இறுதி கட்டப் பணிகள் குறித்தும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அவருடன் தி.மு.க மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வரும் ஒவ்வொரு பகுதியாக சென்று அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் அதிகாரிகள் ஒவ்வொரு பணிகளாக விளக்கிக் கூறினர். அவர்களிடம் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கும்படி அமைச்சர் கே. என் நேரு உத்தரவிட்டார்.

அதன் பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, செம்மொழி பூங்கா இறுதி கட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் குறிப்பிட்ட தேதிக்குள் செய்து முடிக்கப்படும் என்றார்.

Advertisement

பூங்காவை வருகிற 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு அவர் செம்மொழி பூங்காவில் உள்ள மூலிகை தோட்டங்கள் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுகிறார் என்றார்.

மேலும் பூங்காவை திறந்து வைத்ததும் பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில் அவர் கலந்துரையாடுகிறார் பூங்கா 45 ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் திறந்து வைத்ததும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படும். டிசம்பர் 1 முதல் அனுமதிக்கலாம். மழை பெய்தாலும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் பூங்கா திறக்கப்படும் என தெரிவித்தார்.

பூங்கா பணிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அதை நிறைவேற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் செய்து வருகிறார் என்றும் திறப்பு விழாவிற்காக அவசர அவசரமாக பணிகள் நடைபெறவில்லை என கூறினார்.

அனைத்தும் சிறப்பாக நடைபெறுகிறது. மெதுவாக வேலை செய்தால் மெதுவாக வேலை செய்கிறீர்கள் என்கிறீர்கள். வேகமாக வேலை நடந்தால் ஏன் ? வேகமாக வேலை நடக்கிறது என்று. கேட்கிறீர்கள். பூங்காவை பராமரிப்பது நிர்வாகிப்பது குறித்து ஏற்கனவே அறிவித்தபடி பணிகள் செய்யப்படும் என கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெங்கு கொசுப் பரவல்- கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி 50,000 அபராதம்…

கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள்....

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...