கோவையில் மாயமான கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு; பெற்றோர் கதறல்!

கோவை: கோவையில் மாயமான கல்லூரி மாணவர் 3 நாட்களுக்குப் பிறகு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெற்றோர் மற்றும் நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை, செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சுபாஷ் (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

இந்த நிலையில் சுபாஷ் 26ம் தேதி காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் சுபாஷுக்கு போனில் அழைத்து கேட்டுள்ளார். அப்போது சுபாஷ் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் மன உளைச்சலாக இருப்பதாக கூறியுள்ளார்.

அவரைப் பெற்றோர் சமாதானப்படுத்தி வீட்டிற்கு வரும்படி கூறி உள்ளனர். ஆனாலும் சுபாஷ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது உக்கடம் பெரியகுளக்கரையில் ஒரு புத்தகப்பை கிடந்துள்ளது.

அதனைப்பார்த்த போது சுபாஷின் புத்தகப்பை என்று தெரியவந்தது. இதைக் கண்டு சுபாஷின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை கண்டுபிடித்து தரும்படி பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனே பெரிய கடை வீதி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருகில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. குளக்கரையில் புத்தகப்பை அனாதையாக கிடந்ததால் சுபாஷ் குளத்தில் குதித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் 7 பேர் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மாணவர் சுபாஷை தேடினர். ஆனால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி பாதிக்கப்பட்டது.

இரவில் தேடும் பணியை கைவிட்டுவிட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர். நேற்று காலை 2வது நாளாக மீண்டும் உக்கடம் பெரியகுளத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் நேற்று வரை அவரது உடல் கிடைக்கவில்லை. இன்று காலை 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் குளத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது உடல் ஆழமான பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

அவரது உடலைக் கண்டு அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கல்லூரி மாணவர் மாயமானதாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் பெரிய கடை வீதி போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.