கோவை:சர்வதேச விமான நிலையம் அருகே தனது ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
அதன்படி மாநகரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் 59 வெறிச்சோடிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இரவு நேரங்களில் அந்த இடங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார் தங்கள் உட்பட்ட வெறிச்சோடிய பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களுக்கு தினமும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில், போலீஸ் அதிகாரிகள் இந்த இடங்களைக் கண்காணித்து தேவையற்ற நபர்களை விரட்ட கூறப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரோந்துப் படையினர் ரோந்து செல்லும்போது டார்ச், லத்திகள் மற்றும் தடியடிகளை எடுத்துச் செல்லவும், சைரன்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமராக்களை பொருத்திய நில உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை. கேமராக்கள் மற்றும் விளக்குகளை பொறுத்த நாங்கள் அவர்களிடம் கூறி வருகிறோம். ஆனால் அவற்றைப் பராமரிக்கும்படி நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. போலீசார் உடன் சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


