Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின் பராமரிப்புப் பணிகளுக்காக இரண்டு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (28.10.2025) செவ்வாய்க்கிழமை மின்வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
அந்த பகுதிகள் பின்வருமாறு:-
ஆர்.எஸ்.புரம் துணை மின்நிலையம்:
ஆரோக்கியசாமி சாலை, இராமச்சந்திர சாலை, டி.பி.சாலை, லாலி சாலை (Lawley Road), தடாகம் சாலை, கவுளி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவார் பேட்டை, காந்தி பூங்கா பகுதி, கோபால் லேஅவுட், சாமியார் புதிய வீதி, இடையர் வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகள்.
சின்னத்தடாகம் துணை மின்நிலையம்:
சின்னத்தடாகம், ஆனைக்கட்டி, நஞ்சுண்டாபுரம், பண்ணீர்மடை (சில பகுதிகள்), பெரிய தடாகம், பப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.




