கோவையில் பப்புகளில் பார்ட்டி… ஜாலி… சீரழியும் இளசுகள்… பெற்றோர்களே உஷார்!

கோவை: கோவையில் டேட்டிங்க் ஆப்களைப் பயன்படுத்தி ஜாலிக்காக இரவு நேர பப்புகளுக்கு வரும் இளம்பெண்கள், இளைஞர்கள் சீரழிந்து வரும் கலாச்சாரம் குறித்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோவையில் டேட்டிங் ஆப் பயன்படுத்தும் இளசுகள் பெருகிவருகின்றன. அதேபோல மாநகரில் இரவு நேர பார்ட்டிகளும், பப்புகளும் அதிகரித்து வருகின்றன. இங்கு செல்லும் இளம் வயதினர், விடிய விடிய குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த டேடிங் ஆப் மூலம் பழகி பெண்கள், வாலிபர்களிடம் ஒரு சில கும்பல் பணம், நகைகளை பறித்து வருகின்றனர். இது சமந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆப்களால் ஏற்படும் பிரச்னை குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை, பெங்களூரில் இருந்த பப்-பார்ட்டி கலாச்சாரம் தற்போது கோவைக்கும் வந்து விட்டது. தற்போதைய காலகட்டத்தில் அதனை தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால் புதிய நட்பு வட்டாரத்தைத் தேடிச்செல்லும் இன்றைய இளம்பெண்கள், இளைஞர்கள் சமூக வலைதளம் மூலம் முன்பின் தெரியாதவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு சுற்றி வருகின்றனர்.

அதில் ஒரு சிலரே நல்லவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் பணத்தை பறிக்க இதனை கையாளுகின்றனர். தற்போது டேடிங் ஆப் மூலம் பலர் அறிமுகம் இல்லாதவர்களிடம் சிக்கி கொள்கிறார்.

இந்தியாவைப் பொருத்தவரை பெயர்கள் வெளியிட விரும்பாத 50க்கும் மேற்பட்ட டேட்டிங் ஆப்புகள் உள்ளன. இதன் மூலம் பழகுபவர்களை பார்ட்டி, பப்புகளுக்கு அழைத்து செல்லலாம்.

பார்ட்டிக்கு வருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை கொடுத்து வருகின்றனர். ஒரு சில கும்பல் டேட்டிங் ஆப் மூலம் பார்ட்டிக்கு அழைத்து அவர்களிடம் இருந்து பணத்தையும், நகையையும் பறித்து விடுகின்றனர்.

வெளியூர்களில் இருந்து படிக்க வருபவர்களும், வேலைக்கு வருபவர்களும் தான் இந்த ஆப்பை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பணத்தை, நகையை இழக்கும் போது போலீசில் புகார் அளித்தால் குடும்பத்தினருக்கு தெரிந்து விடும் என புகார் அளிப்பது இல்லை.

கோவையில் டேட்டிங் ஆப் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் பேர் வெளி மாநிலம், மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பப்புகளில் தனியாக உள்ளே அனுமதிக்க கட்டணமும், ஜோடியாக சென்றால் அனுமதி இலவசமும் வழங்கி வருகின்றனர்.

இதனால் கல்லூரி மாணவர்கள் தங்களது தோழிகளை பகுதி நேர வேலையாக பப்புகளுக்கு அழைத்து சென்கின்றனர். அவர்கள் பப்புகளுக்கு முன்பு நின்று தனியாக வருபவர்களிடம் ஒரு தொகையை வாங்கி தோழிகளை உள்ளே அனுப்பி விடுகின்றனர்.

உள்ளே அழைத்துச் சென்றால் அவர்களுக்கு வேண்டியதை அந்த இளைஞர்கள் வாங்கி தரவேண்டும். 70 ரூபாய் மதிப்புள்ள அரை பீர், பப்புகளில் குறைந்தது 750 ரூபாயில் இருந்து விற்பனை செய்கின்றனர்.

Coimbatore pub with dance floor

இரவு முழுவதும் குடித்து கும்மாளமிட்டு அதிகாலை நேரங்களில் அவர்கள் வீடு திரும்புகின்றனர். இதனால் அவர்கள் வாகன சோதனையிலும் பெரும்பாலும் மாட்டுவது இல்லை. வெளியூருக்கு படிக்க, வேலைக்கு அனுப்பும் பெற்றோர் தங்களது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் போது அவர்கள் இதுபோன்று தவறான பாதைகளில் செல்கின்றனர்.

அனைவருக்கும் போலீசார் மட்டும் பாதுகாப்பு கொடுக்க முடியாது. நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். வௌியூர்களில் இருக்கும் பிள்ளைகளிடம் குடும்பத்தினர் அடிக்கடி போனில் பேச வேண்டும், அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp