Header Top Ad
Header Top Ad

எழுச்சி நாள் கொண்டாடிய கோவை RAF வீரர்கள்!

கோவை: கோவையில் RAF பிரிவினர் சார்பில் CRPF 87வது எழுச்சி நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

கோவை ரேபிட் ஆக்ஷன் போர்ஸ் பிரிவில் (RAF), CRPFன் 87வது எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பிரிவு கமாண்டண்ட் சஞ்சய் குமார் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீர மரணமடைந்த முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கவுரவ காட்சிப் படை பேரணி நடத்தப்பட்டது.

Advertisement
Lazy Placeholder

மேலும், சிறப்பாகச் சேவை புரிந்த வீரர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Lazy Placeholder

தொடர்ந்து, உடற்பயிற்சி மற்றும் ஒழுங்கான வாழ்வியலை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இதில் வீரர்களோடு பொதுமக்களும் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி சென்றனர்.

Advertisement
Lazy Placeholder

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் ஆண்கள் பெண்களுக்கான கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles