Coimbatore weather: கோவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மழை இந்த வாரத்தில் 5 நாட்கள் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவையில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. தினமும் 95 முதல் 96 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கோவையில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான கோவை வானிலை முன்னறிவிப்பு பின்வருமாறு:-
ஏப்ரல் 8 (புதன்கிழமை):
கோவையில் இன்று வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9 (வியாழக்கிழமை):
கோவையில் நாளை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
ஏப்ரல் 10 (வெள்ளிக்கிழமை):

வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை கோவையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகலாம்.
ஏப்ரல் 11 (சனிக்கிழமை):
சனிக்கிழமையும் கோவையில் பகுதி மேகமூட்டத்துடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும்.
ஏப்ரல் 12 (ஞாயிற்றுக்கிழமை):
ஞாயிற்றுக்கிழமையும் பகுதி மேகமூட்டமான வானிலையுடன், லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 13 (திங்கட்கிழமை):
கோவையில் வரும் திங்கட்கிழமையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அன்றைய தினத்தில், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களே, நம்ம ஊரில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் வெப்பத்தில் வாடியுள்ள கோவை வாசிகளுக்கு இந்த குளுகுளு செய்தியைப் பகிர்ந்து, அவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்திடுங்கள்.

