கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப் பாம்பால் பரபரப்பு நிலவியது.

வீட்டில் இருந்த கோழியைத் தனது பிடியில் சிக்க வைத்து, விழுங்குவதற்குத் தயாராக இருந்த அந்தப் பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வனத்துறையினருக்குச் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மிகவும் சாதுர்யமாகவும், பாதுகாப்பாகவும் அந்த மலைப்பாம்பைப் பிடித்தனர். பின்னர் ​பாம்பின் பிடியில் இருந்து கோழி உயிருடன் மீட்கப்பட்டது.

Advertisement

பிடிபட்ட மலைப்பாம்பு காயங்கள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதனை அருகில் உள்ள பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடுவிக்க கொண்டு சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு வளர்ச்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்/பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது....

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.