கோவை: கோவையில் நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மைத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஜனவரி 26 ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அந்த வகையில் மாநகரின் ஒரு சில இடங்களில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. புறநகரில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை காணப்பட்டது. இதனிடையே, நேற்று பெய்த மழை அளவு வெளியாகி உள்ளது.
அந்த விவரம் பின்வருமாறு:-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் 3.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் 7 மில்லி மீட்டர், பில்லூர் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கோவை தெற்கு தாலுகா அலுவலக சுற்றுவட்டாரப் பகுதிகளில் 0.50 மில்லி மீட்டர் மழையும், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சிறுவாணி அடிவாரத்தில் 1 மில்லி மீட்டர் மழையும், போத்தனூர் ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 0.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மொத்தமாக கோவையில் நேற்று 19.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக கோவையில் 0.87 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Coimbatore weather: கோவையில் இன்றைய வானிலை நிலவரம்
News Clouds Coimbatore

