கோவையில் ரஷா பந்தன் கொண்டாட்டம்- சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும் ஆசி பெற்றும் கொண்டாடிய சகோதரிகள்

கோவை: கோவையில் சகோதரர்களின் உறவை போற்றும் வகையில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் நிகழ்வில் சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றும் சகோதரிகள் கொண்டாடினர்.

சகோதரர்கள் உறவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் பெரும்பாலும் வட மாநிலத்தை சார்ந்தவர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இந்நாளில் ஒவ்வொரு குடும்பத்திலும் சகோதரிகள் சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்துவர். பெரும்பாலான குடும்பங்களில் இந்த ரக்ஷா பந்தன் நாளில் பெண்கள் அவர்களது சகோதரர்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்து விரதம் கொள்வர்.

அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு பகுதிகளில் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் வட மாநில குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ரக்ஷா பந்தனை கொண்டாடினர்.

Advertisement

காலையிலிருந்து பெண்கள் அவர்களது சகோதரர்களுக்காக விரதம் இருந்து மாலை விரதத்தை முடித்து சகோதரர்களுக்கு ராக்கி கட்டி இனிப்புகள் வழங்கி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றனர். இதில் பெண் குழந்தைகளும் அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி இந்நிகழ்வை கொண்டாடினர்.

மேலும் ரக்ஷா பந்தன் சிறப்பு பாடல்களை பாடியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் சகோதரர்களும் அவர்களது சகோதரிகளுக்கு அன்பளிப்பை வழங்கினர். இதில் குடும்பத்துடன் ரக்ஷா பந்தன் பாடலை பாடியது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp