Saibaba Colony Flyover: ஒத்துழைப்பு இல்லை; மேம்பாலம் திறப்பதில் தாமதம்!

Saibaba Colony Flyover: கோவை சாயிபாபா காலனி மேம்பாலம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மின் வாரியம் மற்றும் மாநகராட்சியின் ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாயிபாபா காலனியில் கங்கா மருத்துவமனையில் தொடங்கி, மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2024ம் ஆண்டு தொடங்கியது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.75 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த மேம்பாலம் திறக்கப்படுகையில், சாய்பாபா காலனியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மேம்பாலக் கட்டுமானப் பணிகளால் அங்கு தற்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், பொதுமக்கள் மோசமான சாலைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்த மேம்பாலத்தை வரும் ஜனவரி மாதம் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரியம் மற்றும் கோவை மாநகராட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காததால் மேம்பால கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு, மேம்பாலம் திறப்பு தள்ளிப்போயுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சாய்பாபா காலனி அண்ணா மார்க்கெட்-மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்காக உயரழுத்த மின் கேபிள்கள் செல்வதால், அந்த இடத்தில் அமைக்க வேண்டிய டெக் கட்டுமானம் முடங்கியுள்ளன.

இந்த கேபிள்கள் மாற்றப்படாத வரையில் அந்த பில்லர்களை இணைக்கும் பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்டப் பணிகளும் தாமதமாகின்றன.

சில வாரங்களுக்கு முன்பே, சாலையோரத்தில் உள்ள HT டவர், மின் கேபிள்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை மாற்ற அனுமதி கோரி மின்வாரியத்திற்கு கோப்புகளை சமர்ப்பித்தும் பதில் கிடைக்கவில்லை.

இதேபோல் மேட்டுப்பாளையம் சாலையின் கீழ் உள்ள குடிநீர் குழாய்கள் மற்றும் வடிகால் குழாய்களை மாற்ற மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும். அது இல்லையெனில், தற்போது மிகவும் அவசியமான அணுகுமுறை சாலைகள் மற்றும் சேவை சாலைகள் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த தொய்வு காரணமாக, மேம்பாலப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி, சேவைச் சாலைகளை விரிவுபடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த தற்காலிக திட்டத்திற்கும் இரு துறைகளின் அனுமதியில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமானப் பணிகளால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மெத்தனப்போக்கை கடைபிடிக்காமல் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.