கோவை: கோவையில் திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா -வுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது.
செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம் உள்ளிட்ட 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்கா பொழுது போக்குக்காக பல சிறப்பம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசித்து வருகின்றனர்.
மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் பூங்காவில் அலை மோதியது. குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நேற்று 7,200 பேர் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் செம்மொழி பூங்காவை 60,500 பேர் கண்டு ரசித்துள்ளனர்.

