கோவை: கோவை செம்மொழி பூங்காவில் மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் மதி அனுபவ அங்காடி திறக்கப்பட்டது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவில் மகளிர் சுய உதவி குழு சார்பில் நடத்தப்படும் மதி அனுபவ அங்காடி திறக்கப்பட்டது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இதனை திறந்தார்.
இங்கு மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், நவதானியங்களால் ஆன பிஸ்கட்டுகள், துணி நைலான் பைகள், கைவினைப் பொருட்கள், சோப்புகள், நறுமண பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இந்த அங்காடியை திறந்து வைத்து அங்காடியை பார்வையிட்டனர். மேலும் முதல் விற்பனையையும் துவக்கி வைத்தனர்.
செம்மொழி பூங்காவிற்கு வார விடுமுறை தினங்கள் பண்டிகை கால விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரியும் நிலையில் மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் இந்த அங்காடி பெரும் வரவேற்பை பெரும் என தெரிகிறது.

